வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2016 (14:44 IST)

முத்தத்துக்கு தடை விதித்த பிரேசில் : பின்னனி என்ன?

ஜிகா எனும் நோய் வேகமாக பரவி வருவதால், பிரேசில் நாட்டில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.


 

 
கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோய் பிரேசில் மற்றும் 24 அமெரிக்க நாடுகளில் படுவேகமாக பரவி வருகிறது. கருவில் இருக்கும் குழந்தைகளையும் இந்த நோய் தாக்குகிறது. 
 
ஜிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை கருதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஜிகா வைரசால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் கருத்தடை, மற்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
 
தற்போது கொலம்பியாவில் ஜிகா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாக இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
அதேபோல், அமெரிக்காவில் ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் பயணிகளுக்கான புதிய மருத்துவ எச்சரிக்கையை அமெரிக்க சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது.