3 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன்: துடிக்க துடிக்க உயிரை எடுத்த அரசு!

3 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன்: துடிக்க துடிக்க உயிரை எடுத்த அரசு!


Caston| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (18:03 IST)
ஏமன் நாட்டில் 3 வயது சிறுமியை 41 வயதான நபர் ஒருவர் மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

 
 
இந்த பலாத்கார வழக்கில் அந்த நபர் குற்றவாளிதான் என நிரூபிக்கப்பட்டு அவருக்கு அதிரடி தண்டனை வழங்கியுள்ளது அரசு. 3 வயது குழந்தையை கற்பழித்து 41 வயதான முகமது அல் மகரப் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் முக்கிய சாலை ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைத்து போலீசாரால் ஏகே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுற்றி நின்ற அனைவரும் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். மேலும் அந்நாட்டு ஊடகங்களிலும் இது ஒளிபரப்பப்பட்டது. ஷரியா சட்டம் ஏமனில் முதன்மையாக கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :