வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (12:58 IST)

ஏமன் நாட்டு முன்னாள் அதிபரின் சொத்துக்கள் முடக்கம்: துருக்கி அதிரடி

ஏமன் நாட்டு முன்னாள் அதிபரின் சொத்துக்கள் முடக்கம்

ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் சொத்துக்களை முடக்கி துருக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


 

 
ஏமன் நாட்டின் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான அலி அப்துல்லா சலே, ஆட்சிகாலத்தில் 60 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3.96 லட்சம் கோடி) சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
அவருக்கு 20 நாடுகளில் சொத்துக்கள் மற்றும் ரொக்கப பணம், பங்குகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில், ஐநா சபையின் முடிவுக்கு ஏற்ப, துருக்கி அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
 
அதன்படி, துருக்கியில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள சலேயின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்