செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (19:12 IST)

யாசர் அராஃபத் விஷமூட்டி கொன்றதாக கூறப்பட்ட வழக்கு தள்ளுபடி

பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைவர் யாசர் அராஃபத் விஷமூட்டி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த வழக்கை, பிரான்ஸ் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 

 
முன்னாள் பாலஸ்தீன அதிபர் யாசர் அராஃபத், கடந்த நவம்பர் 11, 2004 ஆம் ஆண்டு பிரெஞ்சு இராணுவ மருத்துவமனையில் மரணமடைந்தார். எனினும் அவர் அதியுயர் கதிர்வீச்சைக் கொண்ட அனலியம் விசம் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்திருந்தார்.
 
இதனால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், நச்சு இயல் ஆய்வாளர்களின் ஒரு சுவிஸ் குழு அவரது தோண்டியெடுக்கப்பட்ட சடலத்தின் எஞ்சிய துணுக்குகளிலும், அவரது உடலை மூடியிருந்த சவச்சீலையிலும் மற்றும் அவரது கல்லறை மணலிலும் அணுக்கதிர் ஐசோடோப்பு பொலோனியம்-210 கலந்திருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்தது.
 
எனினும் தற்போது, யாசர் அராஃபத் அனலியம் பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து, இந்த வழக்கு கைவிடப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள நீதிமன்றத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விஷயத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது.