வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஜூலை 2020 (07:14 IST)

அச்சுறுத்தும் கொரோனா: எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  தினமும் லட்சக்கணக்கண்க்கில் அதிகரித்து வருகிறது. 
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் தினமும் உலக அளவில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 1,11,81,818 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,92,023 உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,378 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உலக பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4ல் ஒரு பங்கு உள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,90,588 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,32,101 ஆக உயர்வு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.