1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (19:46 IST)

தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்

உலகின் வயதான பெண் என்று கருதப்படும் மிசாவோ ஒகாவா தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார், அவர் 'இந்த வயது ஒன்றும் அதிகம் இல்லை' என்னும் ருசிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார்.


 
 
உலகின் வயதான பெண் என்று கருதப்படுபவர் ஜப்பானை சேர்ந்த மிசாவோ ஒகாவா. இவர் தனது 117ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
 
அவரது பிறந்தநாள் விழாவை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. 
 
இந்த வயதான பாட்டியிடம், அவரது நீண்ட ஆயுளின் இரகசியம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதலிளித்த அவர், இது தனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.



 
 
117 ஆண்டுகள் என்பது நீண்ட காலம் இல்லையா? என்னும் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "117 ஆண்டுகள் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை" என்று ருசிகரமாகக் கூறியுள்ளார்.
 
இந்த மூதாட்டி, தினந்தோறும் மூன்று வேளை அரிசி சாதம் சாப்பிடுவதையும், தினமும 8 மணி நேரம் தூங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளாராம். அவர் உடல் நலத்துடன்,  நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்தப்பக்கம்...

இவர் 2013ஆம் ஆண்டு முதல் உலகின் வயதான பெண் என்னும் கின்னஸ் சாதனை பெற்றுள்ளார். இந்த பாட்டிக்கு மூன்று குழந்தைகள், நான்கு பேரப் பிள்ளைகள், ஆறு கொள்ளு பேரர்கள் உள்ளனர்.


 
1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த மிசாவோ ஒகாவா மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த சில நபர்களில் ஒருவர் என்பது குறிப்பபிடத்தக்ககது.