Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார் டீலரின் வீடு முன்பு பெண் வாடிக்கையாளர் நிர்வாண போராட்டம்


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 9 ஜூலை 2017 (15:26 IST)
பிரேசில் நாட்டில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றதால் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கார் டீலரின் வீடு முன்பு நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

 

 
பிரேசில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் டீலர், பெண் ஒருவருக்கு காரை விற்பனை செய்துள்ளார். கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்துள்ளது. அந்த பெண் காரை மெக்கானிக்கிடம் சோதனை செய்ய கொடுத்தார். சோதனையில் கார் வெளிபுரம் மட்டும் புதிதாகவும் உள்ளே அனைத்தும் பழைய பழுதடைந்த நிலையில் உள்ளது எனபது தெரியவந்துள்ளது. 
 
உடனே அந்த பெண் இதுகுறித்து கார் டீலரிடம் முறையிட்டுள்ளார். அந்த கார் டீலர் விற்பனையுடன் தன் பணி முடிந்துவிட்டது என்றும் இனி அதற்கு தாம் பொறுப்பில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் கார் டீலரின் வீடு முன்பு நிர்வாண போராட்டத்தில் குதித்தார். 
 
இதையடுத்து தகவல் கிடைத்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் அந்த பெண்னை அழைத்துச் சென்று மருத்துவமனையில் மனநல சோதனை நடத்தினர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த பின் அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :