வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2015 (14:49 IST)

முதன் முதலாக தேர்தலில் பெண்கள்: சவுதியில் புதிய அரசியல் பிரவேசம்

சவுதி அரேபிய தேர்தலில் பெண்களுக்கான நீண்ட போராட்டாங்களுக்கு பின் தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், ஓட்டு போடவும் சவுதி மன்னர் சல்மான் அனுமதியளித்ததை தொடர்ந்து, நாளை நடைபெறும் நகராட்சி தேர்தலில் முதன் முதலாக பெண்கள் போட்டியிட்டு, வாக்களிக்க உள்ளனர்.


 
 
சவுதியில் பெண்கள் தேர்தலில் போட்டியிட முடியாது, வாக்களிக்க முடியாது, கார் ஒட்ட கூடாது என பல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல ஆண்டுகளாக பெண்கள் போராடி வந்தனர்.
 
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி கிடைத்துள்ளது. இதிலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
* பெண்கள் ஆண்களுக்கு நேருக்கு நேர் பேசாமல் ஏதாவது தடுப்புக்கு பின்னர் தான் நின்று பேச வேண்டும். அல்லது ஆண் உறவினர்கள் அவர்களுடன் இருக்க வேண்டும்.
 
* பிரச்சாரத்தின் போது வாகனங்கள், விளம்பர பலகைகள், சமூக வலை தளங்களை பயன்படுத்த கூடாது.
 
* தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது.
 
* ஆண்களிடம் நேருக்கு நேராக பேசி ஓட்டு கேட்க கூடாது என பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு சவுதியில் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாளை நடைபெறும் நகராட்சி தேர்தலின் மூலம் சவுதியில் பெண்கள் போட்டியிட்டு, வாக்களிக்க உள்ளனர். பெண்களுக்கான உரிமையை மீட்டெடுக்க புறப்பட்டுவிட்டனர் சவுதி பெண்கள்.