பெண்ணின் காதுக்குள் கூடு கட்டிய சிலந்திப் பூச்சி


Murugan| Last Modified புதன், 30 செப்டம்பர் 2015 (12:34 IST)
சீனாவில் ஒரு பெண்ணின் காதுக்குள் ஒரு சிலந்திப் பூச்சி கூடி கட்டி வாழ்ந்து வந்த விஷயம் பெரும் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 
சீனாவில் லீ என்ற பெண், தன் காதுக்குள் அடிக்கடி ஏதோ சத்தம் கேட்டிக்கொண்டிருப்பதால், மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் காதை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆம். அவர் காதுக்குள் ஒரு சிலந்திப் பூச்சி இருந்தது. மேலும் அது தான் வசிப்பதற்கு ஒரு வலையை அவரின் காதுக்குள்ளே உருவாக்கி வைத்திருந்தது.  
 
இது பற்றி லீ கூறும்போது,  சில நாட்களுக்கு முன்பு, தன் நண்பர் ஒருவருடன் மலைப் பாங்கான இடத்திற்குச் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு கல்லறைக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் ஒரு பழத்தை பறித்ததாகவும், அதன் பின் வீட்டிற்குச் சென்றதிலிருந்த்து காதுக்குள் ஏதோ ஊர்வது போலவும், சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். வலிகளைப் போக்கும் சில மாத்திரைகளை லீ உட்கொண்ட பிறகும் வலி மற்றும் சத்தம் ஆகியவை குறையவில்லை என்றும், அதானால் மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிகிறது. 
 
அவர் காதுக்குள் இருக்கும் சிலந்தியை வெளியே எடுக்க, மருத்துவர்கள் முதலில் சொட்டு மருந்தை அவரின் காதுக்குள் செலுத்தி, அந்தப் பூச்சை மயக்கமடைய செய்துள்ளனர். அதன்பின் அந்த சிலந்தியை மெதுவாக வெளியே எடுத்துள்ளனர்.
 
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இது போன்ற சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சிகிச்சைக்கு வந்தவர் ஒருவரின் காதில், கரப்பான் பூச்சி இருந்ததாகவும், அது மேலும் 25 குட்டிகளை அவரின் காதுக்குள்ளே இட்டிருந்ததாகவும், மொத்தம் 26 கரப்பான் பூச்சிகள் அவரின் காதுக்குள்ளிருந்து வெளியே எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :