தாயை கற்பழித்தவனுக்கு தண்டனை தர வேண்டும்: 44 வருடங்கள் கழித்து நீதி கேட்கும் மகள்

Liberty
Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (11:58 IST)
இங்கிலாந்தில் தன் தாயை சிறுவயதில் கற்பழித்த ஒருவனுக்கு தண்டனை வாங்கி தருவதற்காக மகள் ஒருவர் போராடி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட் மிட்லேண்ட் பகுதியில் பெண் ஒருவர் வித்தியாசமான புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் “எனது தாய் 1975ல் தனது 13 வயதில் அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க அந்த வீட்டிலிருந்த உறவினர் என் தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு என்ன சாட்சி என்று கேட்பீர்கள் என்றால் நான்தான் அந்த சாட்சி. அவரது வன்கொடுமையால் பிறந்தவள்தான் நான்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போலீஸிடம் “அப்போது என் தாய்க்கு 13 வயதுதான் ஆகியிருந்தது. எனவே கற்பழித்தவர் மீது குழந்தை மீது பாலியல் வன்புணர்வு செய்ததாகதான் குறிப்பிட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இது வெஸ்ட் மிட்லேண்ட் போலீஸாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுமார் 44 வருடங்கள் கழித்து இப்படியொரு புகார் அளிக்கப்பட்டிருப்பதால் என்ன செய்வதென்று போலீஸ் குழப்பத்தில் இருக்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :