Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தான் பிரதமராக சுஷ்மா சுவராஜ் இருக்க வேண்டும்: கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்!

பாகிஸ்தான் பிரதமராக சுஷ்மா சுவராஜ் இருக்க வேண்டும்: கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்!


Caston| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (16:34 IST)
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படும் சுஷ்மா சுவராஜ் எங்கள் நாட்டின் பிரதமராக வந்திருந்தால் எங்கள் நாடு மாற்றம் அடைந்திருக்கும் என பாகிஸ்தான் பெண் ஒருவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

 
 
வெளிநாடுகளில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இந்தியர்களுக்கும், சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினருக்கும் பல உதவிகளை செய்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார் மத்திய அமைச்சர் சுஷ்மா.
 
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜாப் ஆசிஃப் என்ற பெண் நோயாளி ஒருவரை இந்தியா கொண்டு வந்து சிகிச்சை பார்க்க முயன்றார். பாகிஸ்தான் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் நோயாளியின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளது.
 
அப்போழுது இந்தியா வந்து சிகிச்சை அளிப்பதற்கு விசா நடைமுறைகள் சிக்கிரமாக முடியாமல் தாமதமாகிக்கொண்டே இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தனது நிலைமையை எடுத்துக்குறி உடனடியாக விசா வழங்க டுவிட்டர் மூலமாக மிகவும் உருக்கமாக கோரிக்கை வைத்தார்.
 
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக அந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றினார். இதனை பார்த்து மட்டில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்த அந்த பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு பிரதமராக இருந்திருந்தால் எங்கள் நாடு கண்டிப்பாக மாற்றம் கண்டிருக்கும் என உருக்கமாக பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :