1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (19:43 IST)

'இலங்கையில் மீண்டும் பழைய வரலாறு திரும்ப அனுமதிக்க மாட்டோம்’ - ராஜபக்‌ஷே திடீர் அக்கறை

இலங்கையில் மீண்டும் பழைய வரலாறு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கையின் முல்லைத்தீவுப் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது கூறினார்.
 
கடந்த 1972 முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்தது. அதில் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. சபை கணக்கிட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இங்குதான் இறுதிகட்ட போர் உச்சகட்டமாக நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், இலங்கையில் வருகிற ஜனவரி 8ஆம் தேதி அந்த நாட்டிற்கான அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் தற்போதைய அதிபர் ராஜபக்சே 3ஆவது தடவையாக போட்டியிடுகிறார். நேற்று அவர் தமிழர்கள் அதிகம் வாழும் முல்லைத்தீவு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
அபோது பேசிய ராஜபக்‌ஷே ”போரால் பாதிக்கப்பட்ட இப்பகுதியை மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்க என்னுடன் இணைந்து ஒத்துழைப்பு தாருங்கள். இலங்கையில் மீண்டும் பழைய வரலாறு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து அவரது அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்த மைத்திரி பாலா ஸ்ரீசேனா எதிர்பாராத நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். இது ராஜபக்சேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.