வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : திங்கள், 1 மே 2017 (06:49 IST)

துருக்கி அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு எதிரொலி: விக்கிபீடியாவுக்கு தடை

உலக அளவில் புகழ் பெற்ற இணையதளங்களில் ஒன்று விக்கிபீடியா. இந்த தளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை. உலகில் யாரை பற்றி வேண்டுமானாலும், எந்த நபரை பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள அனைவரும் முதலில் நாடுவது இந்த விக்கிபீடியா இணையதளத்தைத்தான்.


 


இந்நிலையில் இந்த இணையதளத்திற்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது.  சர்வதேச அரங்கில் துருக்கிக்கு எதிரான தகவல்களை விக்கிபீடியா வெளியிட்டு வருவதாகவும், அதுமட்டுமின்றி இணையதளத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விக்கிபீடியா நிர்வாகத்திற்கு துருக்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டியபோதிலும், விக்கிபீடியா அவற்றை கண்டுகொள்ளவில்லை. எனவே விக்கிபீடியா இணையதளத்திற்கு துருக்கி அரசு நேற்று முதல் தடை விதித்தது.

இதுகுறித்து  விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். " தகவல் பெறுவது மனிதனின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட துருக்கி மக்களுடன் நான் எப்போது துணை நிற்பேன்." என்று கூறியுள்ளார். விக்கிபீடியா தடைக்கு துருக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Access to information is a fundamental human right. Turkish people I will always stand with you to fight for this right.