Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போலீஸ் கள்ளக்காதலன் மேல் மோகம்: கணவரான கிரேக்க தூதரை எரித்து கொன்ற மனைவி!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (11:28 IST)
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிதிஸை அவரது மனைவியே கொலை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
பிரேசிலுக்கான கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59). இவர் பிரேசிலை சேர்ந்த பிரான்கோயிஸ் (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரியோ டிஜெனிரோவுக்கு கிரியகோஸ் அமிரிதிஸ் காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் திடீரென மாயமாகிவிட்டார். அவரை யாரோ கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது. 
 
இந்நிலையில் கிரியகோஸ் ரியோவில் ஒரு பாலத்துக்கு கீழ் காரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
 
ஆனால், கிரியகோஸ் வீட்டில் ரத்தக்கரை இருந்ததை வைத்து விசாரித்ததில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. 
 
கிரியகோஸின் மனைவி பிரான்கோயிஸுக்கும், பிரேசில் போலீஸ் அதிகாரியான 29 வயது செர்ஜியோ மொரைரா என்ற நபருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
 
கள்ளக்காதலுக்கு தடையாக கிரியகோஸ் இருந்ததால் அவரை அடித்து கொலை செய்து, அவரை காரில் ஏற்றி சென்று ரியோ அருகே காரில் வைத்து எரித்துள்ளது தெரியவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :