வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 4 ஜூலை 2014 (15:01 IST)

ஷரபோவாவுக்கு மட்டுமில்லை, தலாய் லாமாவுக்கும் சச்சினைத் தெரியாது

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மட்டுமில்லை; திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவும் சச்சின் யார் எனத் தெரியாது என்று கூறியுள்ளார். 

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, சச்சின் டெண்டுல்கர் யார் என்று தெரியாது என்று கூறியுள்ளது குறித்துப் பலரும் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர். சதத்தில் சதம் அடித்த சச்சின் குறித்து, கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். உலகின் எல்லாப் பகுதிகளிலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்ல இயலாது. ஆனால், இந்தியாவில் விரிவாகப் பயணித்த திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவும் சச்சின் யார் என்று தெரியாது என்று கூறியுள்ளார். 
 
2011இல் சச்சின் டெண்டுல்கர், விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை. அந்த ஆண்டில் இமாசலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் உள்ள எச்பிசிஎ விளையாட்டு அரங்கில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் இடையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதைக் காண, தலாய் லாமா வந்திருந்தார். 
 
அப்பொழுது தலாய் லாமாவிடம், "உங்களுக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியுமா?" என்று கேட்டனர். 
 
அதற்கு அவர், "தெரியாது, அப்படி யாரும் நினைவில் இல்லை" என்றார்.