1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (07:06 IST)

சுறா மீனுடன் உடலுறவா? வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்

இங்கிலாந்து டிவி மற்றும் மீடியாக்களில் கடந்த சில மணி நேரமாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. கடலில் சென்று கொண்டிருக்கும் படகில் சுறா மீன் மீது ஒருவர் நிர்வாணமாக படுத்திருக்கும் புகைப்படம் தான் அது. சுறா மீனுடன் உடலுறவு செய்வது போன்று காணப்படும் அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் அந்நாட்டு மீடியாக்கள் பரபரப்பில் உள்ளன.





இந்த நிலையில் சுறா மீன் மேல் படுத்திருப்பவர் முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் போல் இருப்பதாக தகவல்கள் வெளிவரவே, அனைவரும் அவரை காய்ச்சி எடுத்தனர்

ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை என்றும், அந்த புகைப்படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். இதேபோல் இன்னும் ஒருசிலர் அந்த புகைப்படத்தில் இருப்பது தாங்கள் இல்லை என்று விளக்கம் கொடுத்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த உண்மை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.