செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (14:48 IST)

கடலுக்கு அடியில் கட்டப்படுகிறது அதிநவீன நகரம்

ஜப்பான் நாட்டின் ஷிம்சு என்ற கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தைக் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.
 
1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்பட்டு, அதற்குள் வீடுகள், ஹேட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.
 
5 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த நகரத்துக்கு, ‘அட்லாண்டிஸ்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்த ஆழ்கடல் அதிநவீன நகரம் கட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட உள்ளது.
 
இந்த கடல் நகரம் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் என்று ஷிம்சு கட்டுமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது. 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.