வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (12:57 IST)

சந்திர கிரகணம் : ஆரஞ்சு நிறத்தில் தெரியும் நிலா

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி,  சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் தெரியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  
தொடர்ந்து இரண்டு வருட காலக்கட்டத்திற்கு நடைபெறவிருக்கும் இந்த சந்திர கிரகணத்தின் முதல் கிரகணத்தில் நிலா ஆரஞ்சு நிறத்தில் தெரியுமென கூறப்படுகிறது. tetrad என இந்த சந்திர கிரகணங்கள் அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், செவ்வாய் கிரகமும் பூமிக்கு மிக அருகே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும் இந்த சந்திர கிரகணம்,  பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறையுமெனவும், இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு அல்லது  சிவப்பு  நிறத்தில் காணப்படும் எனவும்,   இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக காண்பதற்கு வசதியாக திட்டமிட்டுள்ள நாசா நிறுவனம்  NASA’s Ustream channel  மற்றும் நாசா.கவ் இணையதளம் ஆகியவற்றின் வழியாக அதனை பார்க்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.