வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (19:33 IST)

40 வருடத்திற்கு பின் வெடிக்கத் தயாராகும் கோபக்கார எரிமலை!

சிலியிலுள்ள கல்புகோ எரிமலை 40 வருடத்திற்கு பின் வெடிக்கத் தயாராகியுள்ளது.
 
தென் சிலியிலுள்ள கல்புகோ எரிமலை புதன்கிழமை திடீரென குமுறி புகையையும் சாம்பலையும் வெளித்தள்ளியுள்ளது. கடந்த 40 வருட காலமாக இந்த எரிமலை உறக்க நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 
இந்த எரிமலைக் குமுறலால் தென் துறைமுக நகரான புயர்ரோ மொன்ட்டுக்கு அருகே இராட்சத புகைமூட்டம் எழுந்ததையடுத்து அந்த எரிமலையை சூழ 12.5 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் மக்களை இடம்பெயர உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சிலியிலுள்ள 90 உயிர்ப்புள்ள எரிமலைகளில் மிகவும் அபாயகரமாக விளங்கும் 3 எரிமலைகளில் ஒன்றாக கல்புகோ விளங்குகிறது. சிலிய தலைநகர் சன்தியாகோவிலிருந்து 620 மைல் தொலைவில் மேற்படி எரிமலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலை இதற்கு முன் 1972 ஆம் ஆண்டு குமுறியது.