Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரயிலில் சிக்கி நடைமேடையில் இழுத்து செல்லப்பட்ட பெண்: அதிர்ச்சி வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (19:17 IST)
மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் சிக்கி நடைமேடையில் இழுத்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
இத்தாலி தலைநகர் ரோம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் ஒன்று வந்து நின்றதும்  பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டிருக்கின்றனர். 
 
அப்போது கடைசி ரயில் பெட்டியில் பெண் ஒருவர் ஏற முயற்சித்து பின் இறங்குகிறார். இறங்கும் போது அந்த பெண்ணின் கைப்பை கதவுகளில் மாட்டிக்கொள்ள அதை கவனிக்காத ஓட்டுனர் ரயிலின் கதவுகளை மூடி ரயிலை துவங்குகிறார். 
 
இதனால் தப்பிக்க முடியாமல் அந்த பெண் நடைமேடை முழுவது இழுத்து செல்லப்படுகிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :