வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2016 (11:17 IST)

உலகின் மிகக்கொடூரமான நாடு என்றால் அது அமெரிக்காதான் - அமெரிக்க அரசியல் விமர்சகர்

இந்த உலகின் மிகக்கொடூரமான, மதவாத, மத அடிப்படைவாத ஒரு நாடு உண்டென்று சொன்னால் அது அமெரிக்காதான் என்று உலகப்புகழ்பெற்ற அறிஞரும் அமெரிக்க அரசியல் விமர்சகருமான பேராசிரியர் நோம் சாம்ஸ்கி கடுமையான முறையில் விமர்சித்துள்ளார்.
 

 
அமெரிக்காவின் மஸ்ஸாசூஸெட்ஸ் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் தத்துவவியல் துறையில் பணியாற்றிவரும் 87 வயதாகும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, “தி வயர்” எனும் இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில். ”மத அடிப்படைவாதிகள் ஒரு அரசியல் சக்தியாக சமீபகாலத்தில் மிகவேகமாக மாறி வருகிறார்கள் என்றும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் மதரீதியாக மக்களை அணிதிரட்டுவது என்பது முதல்முறையாக உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
 

 
அமெரிக்காவின் குடியரசு கட்சி வேட்பாளரான பெரும் கார்ப்பரேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் மத அடிப்படையிலேயே தனது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்” என்றும் விவரித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ‘பெர்னி சாண்டர்ஸ், இதுவரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையெல்லாம் விட மிக மிக அதிக அளவு, அதாவது சுமார் 33 மில்லியன் டாலர் அளவிற்கு தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி செலவழித்திருக்கிறார்.
 
ஐரோப்பாவிலும் இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்க முடியும். நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே தேர்தல்களில் ஜனநாயகப்பூர்வ பங்கேற்பு என்பது தொடர்ந்து மலினப்படுத்தப்பட்டு வருகிறது. 
 
குறிப்பிட்ட ஒரு பகுதியினர் செல்வத்தை அளவில்லாமல் குவிக்கிறார்கள். அவர்களே அரசியல் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அதுவே தேர்தலில் பிரதிபலிக்கிறது” என்று சாம்ஸ்கி கூறினார்.