Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கண்டெடுப்பு

Rat
Abimukatheesh| Last Updated: புதன், 8 நவம்பர் 2017 (11:48 IST)
இங்கிலாந்து போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக் மாணவர் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல்லை கண்டுபிடித்துள்ளார்.

 

 
இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் கிராண்ட் ஸ்மித் என்பவர் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரையில் பாறைகளுக்கு இடையே கூர்மையான 2 பற்களை கண்டெடுத்துள்ளார். அவை எலி போன்று பொந்துகளுக்குள் வாழும் உயிரினத்துக்குரியது.
 
அந்த பல் மிகவும் கூர்மையாக, உணவு பொருட்கலை துண்டாக்கி மென்று சாப்பிடும் தனமை கொண்டது. மேலும் அவை எலியின் பல்லுடன் ஒத்து போகிறது. அந்த பற்களை கொண்ட உயிரினம் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஸ்டீவ் சுவீட்மேன் தெரிவித்துள்ளார்.
 
அந்த பற்களை கொண்ட உயிரினம் பாலூட்டி வகையை சேர்ந்தவை. டயனோசரஸ் தொடக்க நிலை வகை மிருகமான டியூரிஸ்டோடான் என்சோமி மற்றும் டியூரிஸ்டோதெரியம் நியூமனி ஆகியவற்றில் ஏதாவது ஒருவகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :