அகதிகளுக்கு தடை: முதல் அடி உபேர் கால் டாக்ஸிக்கு!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 30 ஜனவரி 2017 (17:24 IST)
அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார். 

 
 
மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
ட்ரம்பின் வர்த்தக ஆலோசனைக் கவுன்சிலில் உபேர் கால் டாக்சி நிறுவனத்தின் தலைவர் டிராவிஸ் கலாநிக் உறுப்பினராக இருப்பதால், அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் உபேர் டாக்சி அப்ளிகேஷனை டெலிட் செய்துள்ளனர். 
 
இதை தவிர்த்து, உபேர் டாக்சி ஆப்பை டெலிட் செய்த படத்தை டுவிட்டரில் பதிவு செய்து #DeleteUber என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்துள்ளனர். 
 
இதனால் உபேர் கால் டாக்ஸிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :