வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (18:44 IST)

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்! (படங்கள்)

துருக்கியில் ஆயிரக்கணக்கான ஆண் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள்  பெருமிதப் பேரணி என்ற பெயரில் பேரணி நடத்தினர். அப்போது அவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 

 
துருக்கியின் ஸ்டிக்லால் தெரு, இஸ்தான்புல்லின் மிகப்பெரிய வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அங்கீகரிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையொட்டி, அதனை வரவேற்கும் வகையில் ஸ்டிக்லால் தெருவில் வானவில் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்ட கொடிகளுடன் ஆயிரக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் பெருமித பேரணியில் கலந்து கொண்டனர்.
 

 
இந்தப் பேரணிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து இருந்தது நிலையில், அதனை மீறி அவர்களது பேரணி தொடங்கியது.
 

 
இதனையடுத்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, தடையை மீறி பேரணி நடத்திய ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கண்ணீர் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் பேரணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு நாலாபுறம் அவர்கள் சிதறி ஓடினர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசாரின் தாக்குதலால் பெரும் பரபரப்பும் பதற்றமும் துருக்கியில் ஏற்பட்டது.
 

 
ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணியில் நடத்தப்பட்ட போலீசாரின் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
மேலும் படங்கள் அடுத்த பக்கம்..







 
மேலும் படங்கள் அடுத்த பக்கம்..