வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (17:33 IST)

துனிசியாவில் மக்களாட்சியை நிலைநிறுத்திய அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த உயிலின்படி, அவரது பெயரில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி துறைகளில் உலக அளவில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வருடந்தோறும் வழங்கப்பட்டுவருகிறது.
 

 

 
இந்த ஆண்டின் நோபல் பரிசு பட்டியல் தற்போது நோபல் குழு வெளியிட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இயற்பியல், வெதியியல் துறைகளுக்கு நோபல் பரிசை அறிவித்தது. மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகளும் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும் ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படுகிறது.
 
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவித்தனர்.  நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் இதற்கான அறிவிப்பு வெளியானது. துனிசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisia's "National Dialogue Quartet") என்ற அமைப்புக்கு வழங்கப்படுகிறது. துனிசியாவில் புரட்சிக்கு பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இந்த அமைப்புக்கு நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது என்று நார்வே நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் அறிவித்துள்ளார். 
 
4 அமைப்புகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு துனிசியாவில் அரபு எழுச்சி தொடங்கிய நிலையில் அங்கு ஜனநாயக முறையில் மக்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட இந்த அமைப்பு பெரும் பங்கற்றியது.
 
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த 5 பேர் குழு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்குகின்றனர்.