1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (12:30 IST)

துனிசியா நாட்டில் அவசரநிலை பிரகடனம்: அதிபர் உத்தரவு

தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் துனிசியா நாட்டில் ஒரு  மாதத்திற்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


 

 
துனிசியா நாட்டின் தலைநகர் துனிஸில் 26 ஆவது கார்த்தேஜ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது.

இந்த விழா நடைபெறும் திரையரங்கம் அருகேயுள்ள முஹம்மது ஐந்தாவது நிழற்சாலை வழியாக ஜனாதிபதியின் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
இந்நிலையில், துனிசியா நாட்டின் அதிபர் பேஜி கெய்ப் எசெப்ஸி, சுவிட்சர்லாந்து நாட்டுக்கு செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்தார்.
 
தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், இந்த வேதனைக்கு உரிய தாக்குதலை அடுத்து இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.
 
தலைநகர் துனிஸில் இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
இந்த ஊரடங்கு சட்டம், மறுஉத்தரவு வெளியாகும்வரை அமலில் இருக்கும் என்று அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.