ரஷ்யா, வடகொரியா, ஈரான் மீது பொருளாதார தடை: கையெழுத்திட்ட டிரம்ப்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (21:40 IST)
ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொருளாதார தடைகளை விதிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்தது.

 
 
பொருளாதார தடை சம்மந்தமாக பிரதினிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின்னர், செனட் சபையிலும் அனுமதி பெறப்பட்டது.  
 
இந்த முடிவு எடுக்கப்பட்ட போது அதற்கு டிரம்ப் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :