வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 17 மே 2017 (13:07 IST)

ரகசிய தகவல்களை ரஷ்யாவிடம் பகிர்ந்ததை நியாயப்படுத்தும் டிரம்ப்!!

ரஷ்ய அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது சரியனது தான் என டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.


 
 
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ரஷ்ய  அமைச்சர் செர்கே லவ்ரோஃபை சந்தித்தார் டிரம்ப்.
 
அப்போது, விமானங்களில் மடிக்கணினியின் உபயோகம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினரின் திட்டத்தை வெளிப்படுத்தும் அதீத ரகசிய தகவல்களை டிரம்ப் பகிர்ந்துள்ளதாக தனியார் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
 
தனது பங்குதாரரிடம் இருந்து பெற்ற ரகசிய தகவல்களை, அனுமதி பெறாமல் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
ரகசிய தகவல்களை வெளிப்படுத்தும் உரிமை ஜனாதிபதிக்கு இருப்பதால் இது தவரல்ல என டிரம்ப் இத்னை நியாயபடுத்தியுள்ளார்.