1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (20:40 IST)

விடாது தாக்கும் டிரம்ப்: சீனப் பொருட்களுக்கு மேலும் வரி

சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மின்னணு பாகங்கள், ஹேன்ட் பேக் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வரிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
 
25 சதவீதம் கூடுதலாக உள்ள இந்த புதிய இறக்குமதி வரிகள் எப்போது அமலுக்கு வரும் என்று தெரியவில்லை. எந்தெந்த பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என்ற இறுதிப்பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.