1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2016 (16:38 IST)

ஸ்டீவன் பன்னோனை ஆலோசகராக நியமித்து சர்ச்சையை துவங்கினார் டிரம்ப்!!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், தற்போதே சர்ச்சைக்குறிய முடிவை எடுத்துள்ளார். 


 
 
டிரம்ப்பை போலவே சர்ச்சைகளுக்கு பெயர் போன வலதுசாரி கொள்கைகள் கொண்ட ஸ்டீவன் பன்னோனை, அதிபரின் தலைமை ஆலோசகராக நியமிக்க உள்ளார் டிரம்ப். 
 
ஸ்டீவன் பன்னோன், யூதர்கள், குடியேறிகள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கொள்கையை கொண்டவர். டிரம்ப்பை போலவே, இவரது கொள்கைகளும் இருப்பதால் அமெரிக்க சிறுபான்மை மக்கள் அச்சத்திலுள்ளனர்.
 
ஸ்டீவன் பன்னோன் தேர்தலின் போது டிரம்ப்பின் பிரசாரத்தை வடிவமைத்து தரும் பதவியில் இருந்தார். அதிபரின் ஆலோசகர் பதவியில் இதற்கு முன்பு இருந்த கர்ல் ரோவ் மற்றும் வலெரி ஜர்ரெட் ஆகியோர் சர்ச்சையை சம்பாதித்தவர்கள். ஆனால் அவர்களுக்கு நீண்ட கால கட்சி நடைமுறை, அரசியல் அனுபவம் இருந்தது. 
 
ஆனால், ஸ்டீவன் பன்னோன் ஒரு பத்திரிகைக்காரர். வெள்ளை ஆதிக்க சிந்தனை கொண்ட ஸ்டீவன், அதிபரின் ஆலோசகராவது அமெரிக்காவை எங்கு கொண்டு நிறுத்தும் என தெரியாது. 
 
கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா ஆட்சியில் தான் அதிக கருப்பினத்தவர்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். நிலைமை இப்படி மோசமாக இருக்கும்போது ஸ்டீவன் வருகை இதை மேலும் ஆபத்துக்குள்ளாக்கலாம். 
 
இது குறித்து, செய்தித் தொடர்பாளர் குர்ட் பர்டெல்லா கூறுகையில், ஸ்டீவ் ரொம்பவே அக்ரசிவானவர். அவருக்கு அதிரடி தேவை. எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார், பலவீனத்தை வெளியில் காட்ட மாட்டார். தனது வெள்ளை மாளிகை அதிகாரத்தை எதிரிகளை பழி வாங்கவே அவர் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.