வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (13:13 IST)

இவரல்லவோ அதிபர்: நிவாரண நிதியாக 1 மில்லியன் டாலரை வழங்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வி புயல் தாக்கியது. இதனால் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 


 
 
கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு 3 நாளில் மட்டும் 125. செ.மீ மழை பெய்துள்ளது என கூறப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 
 
நகரின் 3-ல் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால், ஹூஸ்டன் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள 1½ கோடி மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
 
இந்நிலையில், ஹார்வே புயலால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய வெள்ள நிவாரண நிதியாக தனக்கு சொந்தமான ஒரு மில்லியன் டாலரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.