செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 24 மே 2016 (22:38 IST)

மரங்கள் தூங்குமாம்

ஆஸ்திரியா, பின்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக மரங்கள் தூங்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.


 

 
ஆஸ்திரியா, பின்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் லேசர் ஸ்கேனர் கொண்டு இரண்டு மரங்களை ஸ்கேன் செய்து, சார்லஸ் டார்வின் சிறிய செடிகளில் அறிந்த கேட்பாட்டைக் கொண்டு ஆராய்ந்தனர்.
 
அதில் மரங்கள், மனிதர்கள் விலங்குகள் போன்று பகல்-இரவு என மாறி மாறி தூங்குவதை முதன் முதலாக கண்டறிந்துள்ளனர்.
 
இதுபற்றி பின்னிஷ் புவியிடம் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர் விளக்கி கூறியதாவது:-
 
வானிலை மற்றும் இடத்திற்கு ஏற்ப மரங்கள் தூங்குவது மாறுபடுகிறது.
 
பின்லாந்தில் உள்ள ஒரு மரம் சூரிய வெளிச்சம் பெறும் முன், மரத்தில் உள்ள இலைகள் எல்லம் தொங்கிய நிலையில் காணப்பட்டது, பின் பழைய நிலைக்கு மாறியுள்ளது.
 
இது மரத்தின் செலகள் உள்ளே ஏற்படும் நீர் அழுத்தம் காரணமாகவும் இருக்கலாம்.