வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (17:45 IST)

நெகிழ வைக்கும் சிங்கத்தின் பாசம் : நெகிழ்ச்சி வீடியோ

தன் உயிரைக் காப்பற்றியவரை நெடுநாள் கழித்து பார்த்த ஒரு சிங்கம், அவருடன் ஒரு நாய் குட்டிபோல் கொஞ்சி விளையாடும் ஒரு வீடியோ வெளி வந்திருக்கிறது. 


 

 
மெக்சிகோவில், ஒரு அமைப்பு பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளான புலி,சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை காப்பாற்றி மறு வாழ்வு அளித்துவருகிறது. 
 
வேட்டைகாரர்களின் தாக்குதலிலிருந்து தப்பிய கியாரா என்ற பெண் சிங்கத்தை அடோல்போ என்பவர் காப்பாற்றி இந்த காப்பகத்தில் குட்டியிலேயே விட்டு விட்டார். 
 
இப்போது சில வருடம் கழித்து, அவர் அந்த காப்பகத்திற்கு வந்த போது, அவரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த வளர்ந்த சிங்கம், அவருடன் கொஞ்சி விளையாடியது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..