Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்: அறிவிப்பு செய்த 3 இளம்பெண்கள் கைது


sivalingam| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (05:40 IST)
தாய்லாந்து நாட்டின் பார் ஒன்றில் ஒரு பீர் வாங்கினால் இன்னொரு பீர் இலவசம் என்று சமூக வலைத்தளம் மூலம் அறிவிப்பு செய்த மூன்று இளம்பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.


 
 
ஜாஞ்சிரா ஜனசகா, நந்திதா பூயாமனோஜ், நண்டரிகா பியூக்லெங் ஆகிய மூன்று இளம்பெண்கள் தாய்லாந்து நாட்டின் பிரபல பார் ஒன்றில் பணிபுரிகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று கவர்ச்சியான உடையணிந்து ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்ற சலுகையை அறிவித்து, இந்த சலுகையை பெற இரவு ஒன்பது மணிக்குள் வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்றும் சமூகவலைத்தளத்தில் வீடியோ மூலம் அறிவிப்பு செய்தனர்.
 
இந்த வீடியோவை பார்த்து குறிப்பிட்ட அந்த பாரை நோக்கி வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இந்த நிலையில் கவர்ச்சியான உடையணிந்து சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததற்காக திடீரென போலீசார் அந்த மூன்று பெண்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :