Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விபச்சாரிக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த ஊனமுற்ற பிச்சைக்காரர்


sivalingam| Last Modified புதன், 17 மே 2017 (23:04 IST)
வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண், தனது ஒரே மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் விபச்சாரம் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் இரவில் வேலைக்கு செல்லும்போது மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார் அந்த அன்புத்தாய்.

 


இந்த நிலையில் ஒருநாள் மரத்தடியில் தொழிலுக்காக வாடிக்கையாளருக்கு காத்திருக்கும்போது கனமழை பெய்தது. இதனால் வருமானம் இன்றி தவித்த அவருக்கு அருகில் இருந்த பிச்சைக்காரர் ஒருவர் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பணம் கொடுத்து உதவியுள்ளார். அவருடைய அன்புக்கு கட்டுப்பட்ட அந்த பெண், விபச்சாரத்தை கைவிட்டு அவருடன் மீதி நாட்கள் வாழ சம்மதம் கேட்டுள்ளார். தற்போது இருவரும் இணைபிரியாத அன்பு ஜோடிகளாக உள்ளனர்.

இந்த சம்பவத்தை வங்கதேசத்தை சேர்ந்த புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவாக போட்டுள்ளார். இந்த பதிவை படிக்கும்போது கல்நெஞ்சையும் கரையும் வகையில் உள்ளதாக பலர் கமெண்ட் அளித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :