1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (15:47 IST)

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு கலாச்சாரம்

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கி படிக்கும் இரண்டு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் பலியானார்.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர் கதையாகியுள்ளது. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுடுவதும், மர்ம நபர்கள் பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவங்களும் அங்கு தற்போது அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்கஸ் தெற்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

இதே போன்று அமெரிக்காவின் வடக்கு அரிகோனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தங்கி படிக்கும் இரண்டு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 18 வயது மாணவர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாகியால் சரமாரியாக சுட்டதில் ல் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.