வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (15:43 IST)

பிட்காயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?? அதிர வைக்கும் உண்மை...

உலகில் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணம் நேரடியாக பயன்படமால் இணையத்தில் மட்டுமே பயன்படுகிறது. இதற்கு கிரிப்டோ கரன்சி என்று பெயர்.
 
இதில் ஒன்றுதான் பிட்காயின். இதை உருவாக்கியவர்கள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சமீப காலமாக பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வருகிறது. பிட்காயினை பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். 
 
மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்றலாம், இதற்கு வடிவம் இல்லை. மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை. தற்போதைய சந்தை நிலவரப்படி இதனுடைய மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும். 
 
இந்நிலையில், பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அமெரிக்க ஆய்வாளர் மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். பங்கு சந்தையில் இதன் மதிப்பு எவ்வளவு உயர்ந்தாலும் இதன் மதிப்பு பூஜ்யம்தான் என்று கூறியுள்ளார். 
 
பிட்காயினில் பார்க்கப்படும் பண மதிப்பு வெறும் மாயைதான். இது எப்போது வேண்டுமானாலும் மறைந்து போகும் என்றும் எச்சரித்துள்ளார்.