வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (20:47 IST)

அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய விளையாட்டு வீரர்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீரரான பிரான்ஸ் நாட்டின் கால் மான்பில்ஸ், லக்சம்பார்க் வீரர் ஜைல்ஸ் முல்லரை எதிர்கொண்டார்.


 


முதல் செட்டை 6-4 என மான்பில்ஸ் கைப்பற்றினார். 2-வது செட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது முல்லர் அடித்த பந்து உயரமாக வந்ததால், அதை கோர்ட்டின் பின்னால் சென்று வேகமாக அடிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த சுவர் மீது அவர் மோதியதில் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த பெரிய கடிகாரம் பெயர்ந்து விழுந்தது.

உடனே, மான்பில்ஸ், தனது ராக்கெட்டை கீழே போட்டுவிட்டு கடிகாரத்தை தள்ளிவிட்டு தப்பினார். இதனால் அவர்  அதிர்ஷடவசமாக உயிர் தப்பியனார். பின்னர், தொடர்ந்து விளையாடி அந்த செட்டை 6-2 என அவர் கைப்பற்றினார். 3-வது செட்டிலும் கடும் போரட்டத்திற்கு பின் 7-6(5) என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.