1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2017 (17:41 IST)

புடவை விலகிய தமிழ் மணப்பெண் சர்ச்சை புகைப்படம்: கனடா இதழ்

கனடா நாட்டின் பத்திரிகை ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த இதழில் இடம்பெற்றுள்ள அட்டை புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 


 
கனடா நாட்டில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டு இதழ் ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக வெளியிட்டது. அந்த இதழின் அட்டை புகைப்படத்தில் மணப்பெண் புடவை விலகி தொடை பகுதி தெரியும் படி இடம்பெற்றுள்ளது.
 
இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இது துணிந்து இரு, மாற்றம் பெரு என்ற பெண்ணியம் தத்துவம் கூறுவது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இதழின் பதிப்பாசிரியர் கூறியதாவது:-
 
இந்த அட்டைப்படம் தமிழ் கலாச்சாரம் மற்றும் அழகை வெளிப்படுத்துகிறது. இது பெண்ணியத்தின் வெளிபாடு. சேலையில் கால்களை வெளிக்காட்டுதல் ஒரு கலாச்சார தீர்வாகும். அது அப்படியே இருக்கட்டும், என கூறியுள்ளார்.
 
மேலும் அட்டைப்படத்திற்கு மாடலாக இருந்த தனுஸ்கா சுப்ரமணியம் முதல் பலரும் இப்படத்தை ஆதரித்தும் பேசி வருகின்றனர்.