1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2016 (15:36 IST)

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் தண்டனை: தலிபான் பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தான் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் கராக் பாக் என்ற் பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து ஸ்மார்ட்போன்களை அபகரித்துள்ளனர்.


 

 
ஆப்கானிஸ்தான் கராக் பாக் என்ற பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து தலிபான் தீவிரவாதிகள் அவர்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன்களை அபகரித்துள்ளனர்.
 
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அலெம் கான் என்பவர் கூறியதாவது:-
 
தலிபான் பயங்கரவாதிகள் எங்கள் பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து ஸ்மார்ட்போன்களை பிடிங்கிக்கொண்டனர். குறிப்பாக பாடல்கள் இருந்த மொபைல் போன்களை பிடிங்கிக்கொண்டனர்.
 
ஒவ்வொருவரையும் வழிமறித்து சோதனை செய்தனர். பெரும்பாலான மக்கள் சாதாரண மொபைல் போன்களையே வைத்துள்ளனர். சிலர் வெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடம் பேசுவதற்கு ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கின்றனர்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பயங்கரமாக தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.