வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (14:49 IST)

திருமண விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி

துருக்கியில் திருமண விழாவில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.


 

 
துருக்கி சிரியா எல்லையில் உள்ள காஷியான்டெப் நகரத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் அனைவரும் கூடியிருந்த நேரத்தில், தற்கொலை படை பயங்கரவாதி உள்ளே புகுந்து, வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.
 
இந்த தாக்குதலில் 22 பேர் சம்பவ இடத்திலே மரணமடைந்தனர். 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபப்பும் நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
 
துருக்கியில் அணமையில்தான் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நடந்த இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.