Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை அரசு அறிவிப்பு


Murugan| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (19:45 IST)
நாளை உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

 

 
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி விட்டதாக கூறி அவ்வப்போது இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பல வருடங்களாக மீனவர்கள் போராடி வந்தாலும் இன்றளவும் அதற்கு தீர்வு எட்டப்படவில்லை.
 
இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ளதால், நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார்.
 
இலங்கை சிறையில் தற்போது 48 மீனவர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த அறிவிப்பு அந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :