1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (08:00 IST)

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்ச பின்னடைவு

இலங்கை அதிபர் தேர்தலில்: புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச சுமார் 1.34 லட்சம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார் 
 
இலங்கையில் நேற்று காலை 7 மணி முதல் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நேற்றிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன
 
முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் கோத்தபய முன்னிலையில் இருந்தாலும் நேரம் ஆக ஆக, கோத்தபய பின்னடைவில் இருந்தார். குறிப்பாக தமிழர்கள் பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது கோத்தபயவின் பின்னடைவு அதிகமாயிற்று. தமிழர்கள் பகுதியில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு சுமார் 80% வாக்குகள் கிடைத்ததால் அவர் திடீரென முன்னிலை பெற்று வருகிறார்.
 
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவை விட சுமார் 1.34 லட்சம் வாக்குகள் இலங்கை புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது