1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 6 செப்டம்பர் 2014 (11:37 IST)

மத மாற்றத்திற்குத் தூண்டியதாக சர்ச்சை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்குக் கண்டனம்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, இலங்கை வீரர் தில்ஷனை மத மாற்றத்திற்க்குத் தூண்டியதாக கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷேசாத் மீது புகார் எழுந்துள்ளது.

ஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பும் போது, நீங்கள் முஸ்லிமாக இல்லை என்றால், முஸ்லிம் மதத்திற்கு மாறுங்கள். அவ்வாறு செய்தால் வாழ்க்கையில் என்ன செய்தாலும் நேரடியாக சொர்க்கத்திற்குச் சென்று விடலாம் என்று ஷேசாத், கூறியுள்ளார்.

வெளிநாட்டுப் பயணத்தின் போது மதம் பற்றிப் பேசுவது தேவையற்றது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

தில்ஷன், முஸ்லிம் தந்தைக்கும், புத்தமதத்தைச் சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.