1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 18 மார்ச் 2015 (12:43 IST)

பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் மகிந்த ராஜபக்சே

இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்தப் பதவிக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபசே போட்டியிடுவதாக் கூறப்படுகிறது.  
 
இலங்கையில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
 
பிரதமர் பதவியை குறிவைத்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். 
 
தனது கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடாமல் இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
 
இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை தொழிலாளர் கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியாங்கேவுடன் ராஜபக்சே நடத்திவருவதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து, ராஜபசே மீது சர்வதேவ விசாரணைக்கு உத்தரவிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.