1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (12:36 IST)

ஐப்பானிய முதலீடுகளை ஈர்க்க, சிறப்பு மேலாண்மைக் குழு

ஜப்பானிய முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் சிறப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி, 2014 செப்டம்பர் 01 அன்று தெரிவித்தார். ஜப்பான் தேர்வு செய்யும் இரண்டு நபர்களும் வர்த்தகத் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும் குழுவில் இடம் பெறுவர் என்று நிப்பான் கியட்அண்ட்ரன், ஜப்பானிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு, ஜப்பான்-இந்தியா தொழில் ஒருங்கிணைப்புக் குழு அளித்த விருந்தின் போது பிரதமர் தெரிவித்தார்.

 
குஜராத்தின் முதல் அமைச்சராக நான் இருந்த போது ஜப்பானிய வர்த்தகத்துடன் மிகப் பெரிய அளவில் இணைந்து செயல்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், சிறந்த அரசாட்சி, எளிய வர்த்தகம், சுலபமான வழிமுறைகள் ஆகியவற்றை தான் அங்கீகரித்துள்ளதாகத் தெரிவித்தார். வழிமுறைகள் சார்ந்த முடிவுகளில் தாமதம் அழிக்கப்படும் என்று ஜப்பானிய தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பிரதமர் உறுதி அளித்தார்.
 
இந்திய அரசின் முதல் நூறு நாட்களின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக் காட்டிய பிரதமர், அந்நிய நேரடி முதலீடு வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 2014-15ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய மற்றும் ஜப்பானிய அரசிடம் உள்ள எதிர்பார்ப்பு, அரசியல் திடநிலை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். 
 
திறன் மேம்பாட்டிற்கான ஜப்பானிய மாதிரியை இந்தியா பின்பற்ற வேண்டும் இதன் மூலம் உலக அளவிலான திறன் பெற்ற மனித வளத்தைப் பெற முடியும். ஜப்பானிய மேலாண்மைத் திட்டங்களைப் பிரதமர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதமர் தெரிவித்தார்.
 
ஜப்பானியத் தொழிலாளர்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த பிரதமர், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவு வர்த்தகத்தைக் கடந்த உறவு என்று தெரிவித்தார். 
 
21ஆவது நூற்றாண்டு ஆசியாவுக்குச் சொந்தமானது. ஆனால், அது எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எழுந்து உள்ளது. இந்த நூற்றாண்டில், மக்களின் விருப்பங்களைச் சந்திக்க இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் மிகப் பெரிய பங்கு உள்ளது. 
 
மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கான வழிமுறைகளைச் சுட்டிக் காட்டிய பிரதமர் இந்தியாவும் ஜப்பானும் உலகிற்குப் புத்தர் வழியை எடுத்துரைத்து, வளர்ச்சிக்கான சக்தியாகச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.