Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவில் ரூ.100, ஸ்பெயினில் ரூ.4900: எது தெரியுமா?

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (07:26 IST)
இந்தியாவில் சுமார் 100 ரூபாயில் இருந்து ரூ.300 ரூபாய் வரை விற்கப்படும் லுங்கி ஸ்பெயின் நாட்டில் ரூ.4900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் லுங்கி போன்ற ஒரு ஆடையினை ஸரா என்ற நிறுவனம் பெண்களுக்காக வடிவமைத்துள்ளது. லுங்கி போன்றும் ஸ்கர்ட் போன்றும் உள்ள இந்த ஆடை, ஸ்பெயின் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்த லுங்கி ஸ்கர்ட்டை வாங்கி கொள்ளலாம். ஆனால் ரூ.4900 என்பது மிக அதிகமான விலை என்று இந்திய வாடிக்கையாளர்கள் கேலி செய்து வருகின்றனர்.

இந்தியர்களுக்கு இது பாரம்பரிய உடையாக இருந்தாலும் ஸ்பெயின் நாட்டில் இந்த உடை புதியது என்பதால் அந்நாட்டில் இந்த உடையை பெண்கள் விரும்பி வாங்குவதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :