வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 9 ஜூலை 2015 (21:05 IST)

லஞ்சம் கொடுத்த வழக்கில் இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுகள் சிறை

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் 1994 – 1995, 2001 –  2006, 2008 – 2011 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பணியாற்றினார்.
 
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இவர் செனட்டர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். கட்சி தாவலுக்காக 3 மில்லியன் யூரோக்களை சில்வியோ வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒப்புக் கொண்டார். லஞ்சம் கொடுத்த வழக்கு நேப்பில்லங் கோர்ட்டில் நடந்து வந்தது.
 
இந்த வழக்கில் 78 வயதான சில்வியோவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு அரசுப் பணியில் இடம் பெறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.