செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (18:00 IST)

தமிழ் கைதிகள் மீது கருணை காட்டுங்கள் : சி.வி.விக்னேஷ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை கருணையுடனும் பச்சாதாபத்துடனும் அணுக வேண்டும் என்று வடக்குமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

 
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அதில் விக்னேஷ்வரன், “நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்க் கைதிகள் தற்போது துவங்கியுள்ள உண்ணாவிரதப் போராட்டம், கடந்த காலங்களைப் போல சிறை அதிகாரிகளால் வன்முறைத் தனமாக கையாளப்படக்கூடும் என்ற கவலைகள் அளிக்கிறது.
 
பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘இந்த துரதிருஷ்டவசமான மனிதர்களின்‘ பிரச்சனை கருணையுடனும் பச்சாதாபத்துடனும் அணுகப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.