வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 22 மே 2014 (16:07 IST)

உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக் கான்

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
Wealth-X's Hollywood and Bollywood Rich List  என்ற பட்டியல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களை அவர்களின்  மதிப்பின்படி வரிசைப்படுத்தியுள்ளது.
 
இதன்படி, பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூசை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.   
 
இப்பட்டியலில் முதலிடம் பிடித்தது நகைச்சுவை நடிகர் ஜெர்ரி ஜின்பில்டு. இவர் 820 அமெரிக்க டாலர் மதிப்பில் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஷாருக் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கொண்டுள்ளார்.
 
480 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் டாம் க்ருஸ் 3 வது இடத்தில் இருக்கிறார்.
 
இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.